
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 517 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (28) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 29,563 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 332 பேரும், திறந்த பிடியாணைகளின் கீழ் 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 399 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 62 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக மேலும் 4,640 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த தகவல்கள் பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

