
உலக திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.
இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகியதுடன், மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தை கைப்பற்றினார்.
இந்த உலகளாவிய அழகிப் போட்டியில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
CATEGORIES Sri Lanka

