IMF முகாமைத்துவப் பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை

IMF முகாமைத்துவப் பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘டித்வா’ புயலினால் நாட்டில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள IMF பிரதிநிதிகள் குழுவுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் (28) நடைபெற்ற சந்திப்பின் போது, IMF இன் ஆசிய–பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இதனை உறுதிப்படுத்தினார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility – EFF) வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வெற்றியை மதிப்பாய்வு செய்வதற்காகவும், அதேநேரம் IMF இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இலங்கைக்கு மேலும் உறுதிப்படுத்துவதற்காகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )