
இரு நாடுகளும் சமரசமாகத் தயார் என்றால் மத்தியஸ்தம் வகிக்க தயார் என்கிறார் டொனால்டு டிரம்ப்
பாகிஸ்தானின் பல இலக்குகளில் நேற்றும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக
காஷ்மீர்பகுதிகளில் நேற்று இந்தியா நடத்திய தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது
இதற்க்கு பலத்த கண்டனத்தை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
“எங்கள் அப்பாவி இராணுவத்தினர் இரத்தம் சிந்துவதற்கு காரணமானவர்களை பழிவாங்குவோம் ” என்று அறிவித்திருந்தார்
இதேவேளை , இந்திய நிர்வாகக் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் இந்தியா கூறுகிறது.
“ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல்களினூடாக பாகிஸ்தானின் “பயங்கரவாத” நிலைகள் குறிவைக்கப்படுகின்றன என இந்திய தெரிவிக்கின்ற போதிலும்
அப்பாவிப் பொதுமக்கள் குறிவைக்கப்படுவதாக பாக்கிஸ்தான் குற்றம் சாட்டுகிறது
இதேவேளை தனது எல்லைக்குள் 25 இந்திய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது,
பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் மற்றும் அதன் ராணுவம் மீதான ஏவுகணைத் தாக்குதலை முறியடித்ததாக இந்தியா கூறுகிறது.
கடந்த ஏப்ரல் 22 இல் இந்திய நிர்வாகக் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது .
இதற்கு பாகிஸ்தான் அரசை இந்தியா குற்றம் சாட்டியது .எனினும் இந்த சம்பவத்திற்கும் பாகிஸ்தான் அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதேவேளை , இருநாடுகளும் மோதலை அதிகரிக்க கூடாது எனவும் மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

