
உலககிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கஇலங்கையை வந்தடைந்த நெதர்லாந்து அணி
இலங்கையில் நடைபெறும் உலககிண்ண இருபதுக்கு 20 போட்டியின் ஆரம்ப போட்டியல் பங்கேற்க நெதர்லாந்து கிரிக்கெட் அணி நேற்று மதியம் நாட்டை வந்தடைந்தது.
முதல் போட்டி பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு எஸ்.எஸ்.சி.கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரிகள் குழுவும் அவர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

