சுதந்திர தினத்திற்கு எதிரான கரி நாள் பேரணிக்கு வடக்கு–கிழக்கில் அனைவரும் பங்கேற்க வேண்டும் ; யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

சுதந்திர தினத்திற்கு எதிரான கரி நாள் பேரணிக்கு வடக்கு–கிழக்கில் அனைவரும் பங்கேற்க வேண்டும் ; யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடைபெறவுள்ள “கரி நாள்” பேரணிக்கு அனைத்து தரப்பினரும் பங்கேற்று போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மாணவர்கள் இந்த அழைப்பை விடுத்தனர்.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை “கரி நாள்” ஆக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கு பகுதிகளில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த சில தினங்களாக பொதுமக்களை அணி திரட்டி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )