
ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல் ; இருவர் கைது
ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவல் துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமிருந்து, 5 கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பெந்தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் வயது 40 முதல் 45 வயதுக்கிடையில் இருப்பதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

