
மத்துகம பொலிஸிலிருந்து பிஸ்தோல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது
மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப-சேவைப் பிரிவின் பொறுப்பிலிருந்த பிஸ்தோல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளமை நேற்று (ஜனவரி 31) கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பகல் நேரக் கடமை அதிகாரியினால் ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, குறித்த பிஸ்தோல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையத்திற்குள் இருக்கும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

