
“அரசாங்கம் கூறிய பொய்களை உண்மையாக்க முயற்சிக்கிறது ” – – நாமல ராஜபக்ச
தான் கூறிய பொய்களை உண்மையாக்குவதற்காக பொலிஸாரையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பயன்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் நடைபெற்ற ‘கிராமத்திற்கு கிராமம்’ (Gamin Gamata) வேலைத்திட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில் :
“நல்லாட்சி காலத்தில் பணம் பெற்றுக்கொண்டு பொய்களைக் கூறியவர்கள், இன்று மக்களின் பணத்தைச் செலவழித்து தாம் கூறிய பொய்களை உண்மை என்று நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.
இதன் மூலம் முழு நாடும், சமூகமும், இந்த அரச இயந்திரமும் சீர்குலைந்து போகும். ஒரு நாள் இதற்காக அவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். பணத்திற்காக பொய்களைக் கூறிவிட்டு, இப்போது நாட்டின் சொத்துக்களைப் பயன்படுத்தி அந்தப் பொய்களை உண்மையாக்க முயற்சிப்பது மிகப்பெரிய குற்றமாகும்.” என
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

