
மத்துகம பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போன சம்பவம் ; பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் கைது
மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகம பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றும், அதனுடன் 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக நேற்று (1) அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கைத்துப்பாக்கி, மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பின் கீழ் இருந்ததாகவும், ஆவணங்களை பரிசோதித்த போது கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் அவை காணாமல் போயிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

