
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் ; தேரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக, பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த உத்தரவு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ரோஹந்த அபேசூரிய மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வினால் பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

