சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தியவர்களிடமிருந்து                               9 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூல்

சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தியவர்களிடமிருந்து 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூல்

கடந்த 2025-ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மின்சார இணைப்புக்களை பெற்று பயன்படுத்தியவர்களிடமிருந்து 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபராதமாக வசூலித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினர் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் மொத்தம் 9,27,70,061 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 25 இலட்சம் ரூபா சட்ட நடவடிக்கைகளுக்கான கட்டணங்களாகச் செலவிடப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சோதனைகள் குறித்து மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இந்திக்க பெர்னாண்டோ கூறுகையில்:

”மின்மானிகளில் (Electricity Meters) மாற்றம் செய்து மின்சாரம் பயன்படுத்திய 1,259 சம்பவங்களும் சட்டவிரோதமாக மின்னிணைப்பு (Hooks) பெற்று மின்சாரம் பயன்படுத்திய 72 சம்பவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மேலும், சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தெரிவிக்க 0112422259 அல்லது 1987 ஆகிய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் ”

என்றும் மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இந்திக்க பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )