லிபியத் தலைவர் கர்னல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை

லிபியத் தலைவர் கர்னல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை

முகமூடி அணிந்த நான்கு ஆயுதம் ஏந்திய நபர்கள், ஸிண்டான் (Zintan) நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாமின் வீட்டிற்குள் புகுந்து அவரைச் சுட்டுக் கொன்றதாக லிபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சைஃப் அல்-இஸ்லாம் கடாபி உயிரிழந்த செய்தியை அவரது வழக்கறிஞர் அப்துல்லா ஒத்மான் (Abdullah Othman) சமூக வலைத்தளதில் அறிவித்துள்ளார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 53 வயது.

2000 முதல் 2011 வரை தனது தந்தை கடாபியின் ஆட்சிக்காலத்தில், அதிகாரப்பூர்வமாக எந்தப் பதவியும் வகிக்காவிட்டாலும், லிபியாவின் இரண்டாவது முக்கிய அதிகார மையமாக சைஃப் அல்-இஸ்லாம் திகழ்ந்தார்.

2011-ல் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆதரவுடன் நடந்த மக்கள் புரட்சியின் போது கர்னல் கடாபி படுகொலை செய்யப்பட்டார். அப்போது நாட்டை விட்டுத் தப்ப முயன்ற சைஃப் அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 2017-ல் பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

தசாப்த கால கடாபி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, லிபியா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இன்றும் நிலையற்ற தன்மையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக லிபிய அரசியலில் சைஃப் அல்-இஸ்லாம் மீண்டும் ஒரு முக்கிய நபராக உருவெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )