
பாகிஸ்தானில் கனமழை ; 116 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழையால் காராணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த கனமழையால் 116 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்,பருவமழை தீவிரமடைந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

