அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில்
விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (6) உத்தரவிட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் வழங்கிய சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட 46 மில்லியன் ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறியதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )