தயாசிறி ஜயசேகர வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு !

தயாசிறி ஜயசேகர வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு !

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதி வழங்குமாறு உத்தரவிடக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை, இம்மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு தயாராகாத காரணத்தினால் அதனை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரித்து, மாவட்ட நீதிமன்றம் முன்னதாகவே உத்தரவு வழங்கியுள்ளதாக, மனுதாரரான தயாசிரி ஜயசேகர நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த உத்தரவின் அடிப்படையில், பொதுச் செயலாளர் பதவியில் எந்தவிதமான தடையுமின்றி செயல்பட அனுமதி வழங்குமாறு கோரி, இந்த மனுவை நீதிமன்றத்தில் தயாசிரி ஜயசேகர தாக்கல் செய்துள்ளமை குறிபிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )