சுமோ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

சுமோ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில் சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஜப்பானிய சுமோ வீரர் கதாநாயகன் சிவாவிடம் இருக்கிறார்.

இவரை எப்படி அவர் மிண்டும் ஜப்பானில் நடக்கும் சுமோ பந்தயத்தில் போட்டியிட உதவுகிரார் போன்ற காட்சிகள் டிரெய்லரில் நகைச்சுவையான பின்னணியில் இடம் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )