கத்தார் சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர்

கத்தார் சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஓமானில் நடைபெற்ற முக்கியமான தூதரக கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நேற்று கத்தாரின் டோஹா நகருக்கு சென்றுள்ளார்

இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் கத்தார் அரசாங்கத்திற்கும் இடையில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு, தற்போதைய சர்வதேச அரசியல் சூழலின் முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மத்திய கிழக்கில் உருவாகி வரும் இந்த புதிய அரசியல் மறுசீரமையப்பு , எதிர்வரும் காலத்தில் உலக அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )