
9ஆம் தரம் வரையில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள்அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
எதிர்வரும் ஆண்டுகளில் தர வாரியாக பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவுள்ள கால அட்டவணையை அமைச்சர் நளிந்த ஐயதிஸ்ஸ வெளியிட்டார்:
இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ‘கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், விரிவான 5 தூண்களின் (Pillars) அடிப்படையில் கல்வி முறையை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2026 : தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்கள்.
( தரம் 6-க்கான பாடத்திட்ட மாற்றங்கள் மட்டும் சில காரணங்களால் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன)
2027 – தரம் 2 மற்றும் தரம் 7 ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்கள்,
2028 -தரம் 3 மற்றும் தரம் 8 ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்கள்,
2029 – தரம் 4 மற்றும் தரம் 9 ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்கள்,
இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்குள் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்களும் நவீனமயப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் பலர் இணைந்து பணியாற்றி வருவதாகவும் முதலாம் தரத்திற்கான மாற்றங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நளிந்த ஐயதிஸ்ஸ தெரிவித்தார்.
21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் உலகத்தரம் வாய்ந்த அறிவைப் பெற்ற பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் இறுதி இலக்காகும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றங்கள் மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைத்து, செய்முறை அறிவை (Practical Knowledge) மேம்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

