2026 ஜனவரியில் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் நாட்டிற்கு கிடைத்த வருமானத்தில் 31% வளர்ச்சிபொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சாதகமான அறிகுறி

2026 ஜனவரியில் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் நாட்டிற்கு கிடைத்த வருமானத்தில் 31% வளர்ச்சிபொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சாதகமான அறிகுறி

2025 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட சாதனைக்குரிய பணப்பரிமாற்றத்தை தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கமும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து கடந்த ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளன.

2026 ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே இவ்வளவு பெரிய தொகை பெறப்பட்டுள்ளமை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

: இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெறப்பட்ட 573.0 மில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில் 31.1% வளர்ச்சியாகும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு மொத்தம் 8.076 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு ஊழியர் பணமாகப் பெறப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதில் இந்த வருமானம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )