வேலணை – புங்குடுதீவில் வாள்கள் மற்றும் கோடரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

வேலணை – புங்குடுதீவில் வாள்கள் மற்றும் கோடரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர்கள் இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடரி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிசார் மீட்கப்பட்டனர் .

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளும் ஊர்காவற்று பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )