
44,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் 3330 மின்னணு சிகரெட்டுகளுடன் பாணந்துறையைச் சேர்ந்தவர் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அறுபத்தெட்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கை விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
03 சூட்கேஸ்களில் 44,400 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் 15 மின்னணு சிகரெட்டுகள் அடங்கிய 222 சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நேற்று மாலை 05:00 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமான EK-654 மூலம் துபாயிலிருந்து சந்தேக நபர் நாட்டிற்கு வந்துள்ளார்.
பாணந்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட்டார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

