
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 526 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது 36,840 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 316 பேரும், திறந்த பிடியாணைகளின் அடிப்படையில் 144 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 430 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 124 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 6,009 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

