
T20 உலகக் கிண்ணம் ; ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து
T20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 182 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 183 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டிச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
CATEGORIES Sports News

