
பதுளை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பதுளை நகரம் இலங்கையின் பிரதானமான பொருளாதார, நிர்வாக மற்றும் சுற்றுலா மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பாரிய நகர அபிவிருத்தி திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் அண்மையில் (05) எனபாராளுமன்றத்தில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டுவரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நாட்டின் பிரதான 10 நகரங்களுக்குள் பதுளை நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அதன்படி அதன் ஆரம்ப நடவடிக்கையாக உவா மாகாண சபையின் இரண்டாம் கட்டத்தில் கட்டடத்தை இந்த வருடத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்,
பழைய வாடி வீடு அமைந்துள்ள ஒரு ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் புதிய வர்த்தக கட்டடம் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அவசியமான திட்டமிடல்களை மேற்கொள்வது தொடர்பாக இதன் போது மேலும் கலந்துரையாடப்பட்டது.
பதுளை மாவட்ட ஊடகப்பிரிவு

