
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 878 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 878 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் 881 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 02 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் வசமிருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புக்கான இந்த தேசிய நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

