இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி கொழும்பில் நடைபெறும்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி கொழும்பில் நடைபெறும்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.

குறித்த தினத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவாக, இந்தியாவுடனான லீக் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றுக்கு இடையே உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) வழங்கிய விளக்கங்கள் மற்றும் பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றுப் பாகிஸ்தான் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )