இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க அனுமதி ; பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி

இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க அனுமதி ; பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்க தீர்மானிக்கப்பட்டமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்ட பதிவில்,

டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடரின் இணை நடத்துநர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC), இதற்காக ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை இலங்கை ஒருபோதும் மறக்கவில்லை என்றும் ஜனாதிபதி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் ஒரு பகுதியாக இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணைப்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்குமாறு தேசிய அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )