காட்டுயானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

காட்டுயானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நகரிலும், கிராமப்பகுதியிலும் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் இரண்டு காட்டுயானைகள் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைச்சேனை நகருக்குள் நுழைந்த யானை, இடியப்பம் விற்றுக்கொண்டு சென்ற 68 வயதான மூதாட்டியை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிராமப்பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து குறித்த யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )