தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம் இன்று (05) இடம்பெற்றது.

இன்று முற்பகல் யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

1000876091

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1000876071

இன்றைய நினைவுதினத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொன் சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 2989
IMG 2992
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )