போதைப்பொருள் மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

போதைப்பொருள் மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

தெஹிவளையில் 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்தசந்தேக பெண், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டை சோதனைக்குட்படுத்திய போது மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளைமீட்டதோடு குறித்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சோதனையின் போது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ.134,000ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )