
ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 28ஆவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
டெல்லியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பதிவு செய்தது.
துடுப்பாட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் அதிகபட்சமாக சோஹைப் கான் (Sohaib Khan) 68 ஓட்டங்களை பதிவுசெய்தார்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அஸ்மதுல்லா உமர்சாய் (Azmatullah Omarzai) நான்கு விக்கட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 162 ஓட்டங்களை பெற்றது
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) 53 ஓட்டங்களை பதிவுசெய்தார்.
பந்துவீச்சில் ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் ஜுனைட் சித்திக் (Junaid Siddique) மற்றும் முஹம்மது அர்பான் (Muhammad Arfan) தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்

