
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 570 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 576 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சுற்றிவளைப்பின் போது 29,251 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 340 பேரும், திறந்த பிடியாணைகளின் அடிப்படையில் 180 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 362 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 70 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிற போக்குவரத்து குற்றச்சாட்டுகளுக்காக 4,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

