
அம்பத்தலையிலிருந்து தெகிவளை வரை திடீர் நீர் விநியோக தடை – நீர் குழாய் பாதிப்பு
அம்பத்தலையிலிருந்து தெகிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
மொரட்டுவை
ராவத்தாவத்தை
சொய்சாபுர
ரத்மலானை
கல்கிஸ்ஸ
தெகிவளை
வெள்ளவத்தை
பாமன்கடை
முல்லேரியா
நீர் விநியோகிக்கப்படும் பகுதி:
பத்தரமுல்லை பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் நேரம்:
நாளை (பெப்ரவரி 19) காலை 6:00 மணிக்குள் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

