
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 716 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (17) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 716 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸார் தெரிவித்ததாவது, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது இந்த கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 29,595 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 716 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 468 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 335 சாரதிகள், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 48 சாரதிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,125 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

