அவுஸ்திரேலியா, ஓமான் அணிகள் இன்று மோதல்!

அவுஸ்திரேலியா, ஓமான் அணிகள் இன்று மோதல்!

ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது.

அதன்படி, இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி ஓமான் அணியை எதிர்கொள்ளவுள்ளது

இந்தப் போட்டி கண்டி நகரில் அமைந்துள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக்கிண்ண தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட அவுஸ்திரேலியா அணி, எதிர்பாராத தோல்விகளால் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

இது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தொடரின் கடைசி போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து ஆறுதல் பெறுவதற்கும், தங்களது திறமையை நிரூபிப்பதற்கும் அவுஸ்திரேலியா அணி தீவிர முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )