
அக்குரேகொடை இரட்டை கொலை ;பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
புகைப்படத்தில் காணப்படும் குறித்த நபர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும், அவரை அடையாளம் காண உதவும் வகையில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள்:
உயரம்: சுமார் 05 அடி 05 அங்குலம்
வயது: சுமார் 44
உடல் நிறம்: கருப்பு
கண்கள்: மஞ்சள் நிறத் தோற்றத்துடன் மந்தமான நிறம்
சிறப்பு அம்சம்: வலது கன்னத்திற்கு கீழே முகத்தில் வெட்டு வடு
சந்தேக நபரின் தற்போதைய தோற்றம் எவ்வாறு இருக்கலாம் என்பதைக் காட்டும் வகையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்:
D.I.G – மேற்கு மாகாண வடக்கு: 071-8598008
பிரிவு அதிகாரி – நுகேகொட: 071-8591641
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு இயக்குநர்: 071-8592279
தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

