
பெருவில் ஜனாதிபதி பதவி நீக்கம்
பெருவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், நாட்டின் 7-வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோஸ் ஜெர்ரி, தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
சீன தொழிலதிபர் ஜிகுவா யாங் என்பவரை அவர் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்படும் காணொளிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தச் சந்திப்பின் போது அவர் முகமூடி அணிந்து ரகசியமாகச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 75 வாக்குகள் பதிவானதால், ஜோஸ் ஜெரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர், தனது தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தாலும், பாராளுமன்றம் அதை ஏற்கவில்லை.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜோஸ் மரியா பால்கசார் (83) புதிய இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

