
முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
சதோச நிறுவனத்தின் லாரியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மற்றொரு சந்தேக நபரை மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சந்தேக நபரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபர்கள் இன்று (20) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
CATEGORIES Sri Lanka

