
பயாகலை ரயில் விபத்து ; இரு இளைஞர்கள் பலி
இன்று (22) காலை, காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘விரைவு ரயிலுடன் கெப் வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்தனர் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ் நிலையில், 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை மற்றும் பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கபட்டு உள்ளது.

