
அனர்த்ததால் 13ஆயிரத்திற்கு அதிக வணிகமுயற்சிகள் பாதிப்புதொழில் பாதிப்பு குறித்து தெரிவிக்க 16ஆம் திகதிக்கு முன் 0712666660 என்ற ஹொட்லைனுக்கு அழையுங்கள்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை அனர்த்த உதவி நிலையம் இதுவரை 13,698 வணிகங்க அமைப்புகளிடமிருந்து தரவுகளைப் பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்தத உதவி மையம் இதுவரை 5,639 நுண் வணிகங்கள், 4,636 சிறு வணிகங்கள், 2,986 நடுத்தர வணிகங்கள் மற்றும் 437 பாரிய வணிகங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை , பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து தெரிவிக்க அமைச்சு 0712666660 என்ற ஹொட்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பான தகவல்களை விரைவில் வழங்குமாறு தொழில்துறையினரை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இம்மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன் அவற்றை வழங்க வேண்டும் என்றும், www.industry.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தகவல்களை உள்ளிட முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான உதவியை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் அதிகாரியிடமிருந்து பெறலாம் என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

