
அக்குரேகொட இரட்டை கொலை ; சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு
அக்குருகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று (21) அம்பலாங்கொடை – தெல்துவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்ததாவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, சந்தேகநபரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

