
‘மீனகயா’ இரவு விரைவு ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
‘மீனகயா’ இரவு நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயில் இன்று (23) முதல் மீண்டும் இயக்கப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ரயில் இன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.
இந்த ரயிலில் இருக்கை ஒதுக்கீட்டு வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டி ஒன்று, படுக்கை வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இரண்டு கொண்டும் சேவை வழங்கப்படுகிறது.
இருக்கை முன்பதிவுகள் https://seatreservation.railway.gov.lk இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளலாம். மேலும், ரயில் நிலையங்களிலும் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

