
கண்டி மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டன
“தமக்கென்று இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டி மாவட்டத்தில் கட்டப்பட்ட 171 வீடுகள், கண்டி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டன.
இந்த வீடுகளைத் திறப்பதற்கான மாவட்ட தொடக்க விழா, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் ஹாரிஸ்பத்து, எடமுருங்காகொட கிராமத்தில் நடைபெற்றது.
கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

