‘பொடி லெசி’யை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

‘பொடி லெசி’யை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘பொடி லெசி’யை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி பிணையில் விடுதலையானதன் பின்னர், கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பொடி லெசி, 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து, பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )