பெண் வைத்தியர்கள் குளிப்பதைப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிடிவியில் சிக்கினர்

பெண் வைத்தியர்கள் குளிப்பதைப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிடிவியில் சிக்கினர்

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள்
சிலர் குளிப்பதைத் தமதுமொபைல் போனில் படம்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட (U-19) தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் என நாராஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியின் குளியலறையில் பெண் வைத்தியர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அதனை இந்த இளைஞர்கள் இரகசியமாகப் படம்பிடித்துள்ளனர்.

இவர்கள் ஆண்களின் வீடியோ காட்சிகளையும் இவ்வாறு படம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு வீரர்களும் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )