பூம் ட்ரக் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பூம் ட்ரக் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

மில்லனிய பிரதேச சபையின் வேலைத்தளத்தில் ஹியூம் குழாய்களை இறக்கிக்கொண்டிருந்த பூம் ட்ரக் ஒன்று, உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பதலே பகுதியிலிருந்து மில்லனிய பிரதேச சபைக்கு கொண்டு வரப்பட்ட ஹியூம் குழாய்களை இறக்கும் போதே இன்று (29) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பூம் ட்ரக்கின் மேற்பகுதி 33,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்: இந்த மோதலின் போது ட்ரக் இயந்திரத்தை இயக்கியவர் மற்றும் அங்கு நின்றுகொண்டிருந்த பிரதேச சபை ஊழியர் ஒருவர் என இருவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் தாக்கிய வேளையில் ட்ரக்கின் டயர்கள் வெடித்துச் சிதறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மில்லனிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )