இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகிய முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்த பெருமையையும் பெற்றவர். ‘முதல் மரியாதை’, ‘கிழக்கே போகும் ரெயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ உள்ளிட்ட பல படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இயக்குநராக மட்டுமல்லாது, சமீப காலங்களில் நடிகராகவும் பல படங்களில் நடித்துவரும் பாரதிராஜா, ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார். இந்த சம்பவம் பாரதிராஜாவை கடுமையாக பாதித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர், பின்னர் சென்னை திரும்பினார்.

80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )