
பொதுமக்களின் பாவனைக்காக தயாராகும்பதுளை – ஸ்பிரிங் வெலி பெய்லி பாலம்
பதுளை – ஸ்பிரிங் வெலி பிரதேசத்தில் அனர்த்தத்தினால் அழிவடைந்த பாலத்திற்குப் பதிலாக பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணி தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான (RDA) இந்த வீதி, அப்பிரதேசத்தில் மக்களின் அன்றாடத் தேவைக்காக தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான வீதியாகும்.
பாலம் பாதிக்கப்பட்டதனால் பொதுப் போக்குவரத்துப் பணிகள் முழுமையாக தடைப்பட்டிருந்தது.
டிசம்பர் 27 ஆம் திகதி பெய்லி பாலம் அமைக்கப்பட்டதுடன் விரைவாக பாலத்தின் சகல பணிகளும் நிறைவுற்று பொதுமக்களின் பாவனைக்கு விடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்க்கப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka

