
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கையானது நேற்று (05) இரவு 10.00 மணி முதல் இன்று (06) இரவு 10.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் இடங்களுக்கு அவதானமாக இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
கண்டி மாவட்டம் , மாத்தளை மாவட்டம் ,நுவரெலியா மாவட்டம்

